ETV Bharat / state

துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் டிக் டாக் - கல்லூரி மாணவர்கள் அட்டூழியம்! - namakkal tic tok video

நாமக்கல்: ராசிபுரத்தில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் டிக் டாக் வெளியிட்ட இளைஞர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

youth doing tic tok video with gun
author img

By

Published : Sep 6, 2019, 8:27 AM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் லட்சுமி தெரு பகுதியை சேர்ந்த கல்லூரியில் பயிலும் இளைஞர்கள் சிலர் டிக் டாக் செயலி மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதில் புல்லட்டில் வரும் இளைஞர் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்க வருவது போலவும், அதனைக்கண்ட பைக்கில் வந்த இளைஞர் தனது வாகனத்தில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அதில் ஒருவரை சுட்டுக் கொல்வது போலவும், அதனை கண்ட மற்றவர்கள் தப்பி செல்வதாகவும் அந்த வீடியோ காட்சி அமைந்துள்ளது.

இதன் மூலம் அந்த இளைஞர்கள் தாங்களை ரவுடிகளாக சித்தரித்து கொள்ளவும், பொது மக்களை அச்சுறுத்தும் விதமாகவும் இதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் ரசிகர்களான இவர்கள், தங்கள் பெயருக்கு முன்னால் நடிகர் தனுஷின் படங்களில் வரும் கதாபாத்திரங்களின் பெயரை சேர்த்துக்கொண்டு மாரி படத்தில் நடிகர் தனுஷ் கடை உரிமையாளர்களை மிரட்டி வசூல் செய்வது போல் இந்த கும்பல் பொதுமக்களை மிரட்டியும், பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்குவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுக்குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் போலீசார், கல்லூரி மாணவர்கள் என்பதால் அவர்களின் எதிர்காலம் வீணாகி விடும் என்று தெரிவிக்கின்றனர். தற்போது துப்பாக்கியை வைத்து டிக் டாக் செயலியில் பதிவிட்டதால் இந்த இளைஞர்களின் விவகாரம் மேலும் பூதாகரமாக வெடித்துள்ளது.

இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் இளைஞர்களின் வீடியோ குறித்து ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:இராசிபுரத்தில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் டிக் டாக் வெளியிட்ட இளைஞர்கள் குறித்து காவல் துறை விசாரணை
Body:நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் லட்சுமி தெரு பகுதியை சேர்ந்த கல்லூரியில் பயிலும் இளைஞர்கள் சிலர் டிக் டாக் செயலி மூலம் வீடியோ ஒன்றில் வெளியிட்டுள்ளனர். அதில் புல்லட்டில் வரும் இளைஞர் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்க வருவதை கண்ட பைக்கில் வந்த இளைஞர் தனது வாகனத்தில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அதில் ஒருவரை சுட்டு கொல்வது போலவும், அதனை கண்ட மற்றவர்கள் தப்பி செல்வதாகவும் காட்சிகள் அமைந்துள்ளது. இந்த காட்சிகள் இளைஞர்கள் தாங்கள் ரவுடிகளாக சித்தரித்து கொள்ளவும், பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக இதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்த நடிகர் தனுஷின் ரசிகர்களான இவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் நடிகர் தனுஷின் படங்களில் வரும் கதாபாத்திரங்களின் பெயரை சேர்த்துக்கொண்டு மாரி படத்தில் நடிகர் தனுஷ் கடைகளை மிரட்டி வசூல் செய்வது போல் இந்த கும்பல் பொதுமக்களை மிரட்டியும் அச்சுறுத்தும் விதமாக இருச்சக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுக்குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதுக்குறித்து போலீசார் தரப்பில் கல்லூரி மாணவர்கள் என்பதால் அவர்கள் எதிர்காலம் பாலாகி விடும் என்பதினால் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் தெரிவிக்கின்றனர். தற்போது துப்பாக்கியை வைத்து டிக் டாக் செயலியில் பதிவிட்டதால் இந்த இளைஞர்களின் விவகாரம் மேலும் சர்ச்சைக்குள்ளானது. இனியாவது காவல்துறையினர் இளைஞர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது இதுகுறித்து இராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.