நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சுரேஷ் B.COM படித்து விட்டு வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக முயற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த சுரேஷ் அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது. நாளடைவில் சுரேஷ் அதற்கு அடிமையாகி தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் சுரேஷ் ஆன்லைன் ரம்மியில் 5 லட்சத்திற்கும் மேல் இழந்ததாக தெரிகிறது. மனமுடைந்த சுரேஷ் வெளிநாடு செல்ல வைத்திருந்த பணம் மற்றும் உறவினர்களிடம் நன்பர்களிடம் பணம் வாங்கி முழுமையாக ரம்மியில் இழந்து விட்டேன். மேலும் ஆன்லைன் ரம்மியில் மீளமுடியவில்லை எனவும் Bye Bye Miss U ரம்மி என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் ரம்மி விளையாடி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த சுரேஷின் தந்தை விஸ்வநாதன் கூறுகையில், தொடர்ந்து ஆன்லைன் ரம்மியால் தமிழ்நாட்டில் உயிரிழப்பு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது தன்னுடைய மகனும் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார். இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: நேரு விளையாட்டு அரங்கில் காவலர் தற்கொலை