நாமக்கல் அடுத்த விட்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சியை சேர்ந்த சண்முகப்பிரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆறு வயதில் மகன் உள்ளார். இந்தநிலையில், ஓராண்டிற்கு முன்பு கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியைப் பிரிந்த கருப்பணன், தற்போது தனது தயாருடன் வசித்து வருகிறார். சண்முகப்பிரியா தனது ஆறு வயது மகனுடன் நாமக்கலில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், மகனுக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகவே அதற்கு சிகிச்சை அளிக்க சண்முகப்பிரியா கருப்பணனிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு கருப்பண்ன் உதவி செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சண்முகப்பிரியா தனது மகனுடன் கணவர் வசிக்கும் வீட்டிற்கு சென்று தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கூறியுள்ளார். இதற்கு கருப்பண்ணன் முறையாக பதலளிக்காமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இதனால், சண்முகப்பிரியா தனது மகனுடன் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இறைச்சிக் கழிவு ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!