சமீபகாலமாக நாமக்கல்லில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் முதல் சாலையில் உள்ள நாய்கள் வரை அனைத்தும் இறந்துவிடுகின்றன. காரணம் என்னவென்று விசாரிக்கையில் நாய்களுக்கு வைரஸ் தொற்றுநோய் பரவிவருகிறது எனத் தெரியவந்துள்ளது.
இது குறித்து கால்நடை நாய்கள் சிகிச்சைப் பிரிவு மருத்துவர் நெப்போலியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாமக்கல்லில் நாய்கள் இறப்பு விகிதம் அதிகரித்துவருகிறது. இதற்கு முக்கியக் காரணம் நாய்களுக்கு பரவும் வைரஸ் தொற்று ஆகும்.
கோடைக்காலத்தில் திடீரென பெய்யும் மழையின் காரணமாக நிலப்பரப்பு குளிர்ச்சி அடைகிறது அதன் காரணமாக வைரஸ் வளர ஏதுவான சூழல் அமைகிறது. இதன் காரணமாக வைரஸ் உருவாகிறது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு இந்த வகை வைரஸ் எளிதில் தொற்றிக்கொள்கிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படும் நாய்களுக்கு ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சோர்வு ஏற்படும்.
பின்னர் ஓரிரு நாட்களில் இறந்துவிடுகிறது. இதற்கு உடனடியாக தடுப்பூசி அளிக்க வேண்டும் அவ்வாறு செய்தால் நாய்களின் இறப்பினை தடுக்க இயலும்" எனத் தெரிவித்தார்.