நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் பஞ்ச முகம் கொண்ட விநாயகர் கோயில் உள்ளது. இங்கு மூலவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஐந்து வண்ணங்களில் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த பஞ்சமுக கணபதியைத் தரிசிக்க கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்தனர்.
விநாயகர் சதூர்த்தியை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் 655 விநாயகர் சிலைகளை பக்தர்கள் மேடை போட்டு வெகுவிமரிசையாக வழிபட்டனர்.
இதேபோல் திருவண்ணாமலை நகரின் கிரிவலப் பாதையில் உள்ள இரட்டை பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இரட்டைப் பிள்ளையாருக்கு பால், பழம், தேன், சந்தனம், தயிர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
மேலும் பூ மாலை அலங்காரம் செய்யப்பட்டு விநாயகருக்கு கொட்டை, கொழுக்கட்டை, பொங்கல், பழம் உள்ளிட்டவற்றை படையலிட்டு தீபாரதனை நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இரட்டைப் பிள்ளையாரை வழிபட்டனர்.