தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (30). ஓட்டுநரான இவர் இன்று தனது சரக்கு வேனில் ஓசூரில் இருந்து இரண்டு டன் எடையுள்ள தக்காளிப் பழங்களை ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம் வழியாக தோகமலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது நாமக்கல் அடுத்துள்ள பெருமாள்கோவில்மேடு பகுதி அருகே எதிர்பாராத விதமாக சரக்கு வேனின் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் தினேஷ் உயிர் தப்பினார்.
இதற்கிடையே, சாலையில் சிதறிய தக்காளிகளை அப்பகுதி பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த புதுச்சத்திரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.