உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவக் கல்லூரி, மாநில கால்நடை பராமரிப்புத் துறை, ஆவின் நிறுவனம் சார்பில் நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கால்நடை மருத்து பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பாலசந்திரன், பதிவாளர் டென்சிங் ஞானராஜ் உள்ளிட்டோர் முகாமினை தொடங்கி வைத்தனர்.
அப்போது, நிகழ்ச்சியில் பேசிய பதிவாளர் டாக்டர் டென்சிங் ஞானராஜ்; 'வெறிநோய் குறித்தும் அதிலிருந்து காத்து கொள்வது குறித்தும் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்றும், இந்தியாவில் வெறிநோய் பாதிப்பில் உயிரிழப்பவர்களில் 50 சதவீதம் பேர் குழந்தைகளும், 15 வயதுக்கு உட்பட்டவர்களே ஆவர், வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு தடுப்பூசி போட்டால் மட்டுமே
கால்நடை மருத்து பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் பாலசந்திரன் செய்தியாள்ரகளிடம் பேசுகையில்; 'கால்நடை மருத்துவ படிப்புக்கான இளங்கலை முதலாம் ஆண்டு வகுப்புகள் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி தொடங்குகிறது. ஆண்டுக்கு உலக அளவில் 20 ஆயிரம் பேர் ரேபிஸ் நோய் பாதிப்பால் உயிரிழப்பதாகவும், அதில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும், வரும் 2030- ல் ரேபிஸ் இல்லாத உலகத்தை உருவாக்க உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது, இதற்கேற்ப வெறிநோய் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நாய்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதாகவும்' தெரிவித்தார்.