ETV Bharat / state

காதல் விவகாரம்..? நாமக்கல்லில் இளைஞர் அடித்து கொலை - youngster stabbed by unknown person

நாமக்கல்: நண்பர்கள் இருவரை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில், ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

namakkal
காதல்
author img

By

Published : Mar 11, 2021, 3:37 PM IST

நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டி கங்காணி தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் தாமரைக்கண்ணன் (21), திருப்பூரில் தனியார் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், சொந்த ஊருக்கு வந்த தாமரைக்கண்ணன் தனது நண்பர் முரளியுடன் (26) நேற்றிரவு(மார்ச் 10) பொட்டிரெட்டிப்பட்டி ஜல்லிக்கட்டு திடல் பகுதியில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். வெகுநேரமாகியும் இருவரையும் காணவில்லை எனக் குடும்பத்தினர் தேடிச் சென்றுள்ளனர். அப்போது, இருவரும் அங்கு மயங்கிய நிலையிலிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இருவரையும் ஆம்புலன்ஸில் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே தாமரைக்கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். முரளி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், "உயிரிழந்த தாமரைக்கண்ணன் அதேபகுதியைச் சேர்ந்த மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவரின் குடும்பத்தினரிடையே பிரச்னை ஏற்பட்டதால் அவர் தனியாக வாழ்ந்து வருகிறார்.

namakkal
தாமரைக்கண்ணன் நண்பர் முரளி

இதற்கிடையில், முரளியும் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அதில் இருக்கும் பிரச்னைகள் குறித்துப் பேசவே தாமரைக்கண்ணனை சொந்த ஊர் திரும்பியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இருவரையும் யார் தாக்கினார்கள் என்பது குறித்து இன்னமும் விடை தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த எருமப்பட்டி காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: டிஐஜி சர்ப்ரைஸ் விசிட் - மதுபோதையில் பதிலளித்த உதவி காவல் ஆய்வாளர்
!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.