ETV Bharat / state

2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஓட்டுநர் உயிரிழப்பு

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

author img

By

Published : Jul 6, 2020, 9:39 PM IST

Two Truck collides; One dies!
Two Truck collides; One dies!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரிலிருந்து சின்னு என்பவர் லோடு ஏற்றுவதற்காக ஈரோடு சென்று கொண்டிருந்தார். அதேசமயம் ஈரோட்டிலிருந்து மக்காச்சோளம் லோடு ஏற்றிக்கொண்டு, திருச்செங்கோடு நோக்கி பழனிச்சாமி என்பவர் தனது லாரியில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, இரு லாரிகளும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள தொட்டிபாளையம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சின்னு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு லாரியின் ஓட்டுநரான பழனிச்சாமி, படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மொளசி காவல் துறையினர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சுமார் ஒருமணி நேரம் திருச்செங்கோடு - கொக்கராயன்பேட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:தெருநாய்களால் விபத்தில் சிக்கிய எஸ்ஐ உயிரிழப்பு - நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.