நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு வார காலமாக நோய்த்தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. நேற்று ஒரேநாளில் மட்டும் 719 நபர்கள் கரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.
நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 10 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வார்டில் கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இரண்டு நாய்கள் நோயாளியின் படுக்கையில் படுத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு பணியில் இருந்த பணியாளர்களும் இதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
ஏற்கனவே நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதிய படுக்கைகள் இல்லாத நிலையில் காலியாக உள்ள படுக்கைகளில் நாய்கள் படுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஊருக்குள் புகுந்த ராட்சத முதலை: 4 மணி நேரமாகியும் பிடிக்க வராத வனத் துறை!