ETV Bharat / state

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை! - Truck owners have been warned

நாமக்கல்: வருகின்ற 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக போவதாக மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் அறிவித்துள்ளார்.

Truck owners have been warned to go on strike, emphasizing various demands

author img

By

Published : Dec 5, 2020, 10:30 PM IST

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அவசர செயற்குழு கூட்டம் தலைவர் குமாரசாமி தலைமையில் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேக கட்டுபாட்டு கருவி பொருத்துதல், ஒளிரும் பட்டைகள் ஒட்டுவதில் தமிழ்நாடு அரசின் உத்தரவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சம்மேளனத்தின் தலைவர் குமாராசாமி "தங்களது கோரிக்கைகளான லாரிகளுக்கு 49 நிறுவனங்களின் வேக கட்டுபாட்டு கருவியை பொருத்திட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை போக்குவரத்து துறை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

லாரிகளுக்கு 2 நிறுவனங்களின் ஒளிரும் பட்டைகளை (REFLECTED STICKERS) மட்டுமே ஒட்ட வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து 11 நிறுவங்களின் ஒளிரும் பட்டைகளை ஒட்ட அனுமதிக்க வேண்டும்.

லாரிகளில் வாகனங்களின் இருப்பிடத்தை கண்டறியும் ஜி.பி.எஸ் கருவிகளை 8 நிறுவனங்களில் மட்டுமே பொருத்த வேண்டும் என்ற உத்தரவை கைவிட்டு 140 நிறுவனங்களின் ஜி.பி.எஸ் கருவிகளை பொருத்த அனுமதிக்க வேண்டும், இயக்கப்படாத காலத்திற்கான காலாண்டு வரியை ரத்து செய்திட வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தியுள்ளோம்.

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை

ஆனால் இக்கோரிக்கைகள் குறித்து பலமுறை மாநில அரசிடம் முறையிட்டும் அதற்கு தீர்வு காணாத நிலையில் வரும் 27ஆம் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாட்டிலுள்ள 5 இலட்சம் லாரிகள் பங்கேற்கும்" என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோயில் பூட்டை உடைத்து சுமார் 10 ஆயிரம் ரூபாய் திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.