மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் நிர்வாகிகள் கூட்டம் காணொலி காட்சி மூலம் சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி தலைமையில் இன்று (அக்.29) நடைபெற்றது.
இதில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, லாரிகளில் ஏற்றப்படும் ஜவுளி லோடுகளுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட வெளிமாநில காவல் துறை, வட்டார போக்குவரத்து அலுவலர்ள் ஆன்லைன் மூலம் அதிகளவு அபராதம் விதிக்கப்படுகின்றனர்.
இதனை தவிர்த்து முறைப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை தீர்வு எடுக்கப்படவில்லை.
இதனால், வருகின்ற நவம்பர் 5, 6, 7 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் ஜவுளி லோடுகளை ஏற்றுவதில்லை என முடிவு செய்தனர்.