ETV Bharat / state

லிஃப்ட் கேட்பதுபோல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள் கைது - லிஃப்ட் கேட்பதுபோல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள்

நாமக்கல்: லிஃப்ட் கேட்பதுபோல் நடித்து கட்டடக் கலை நிபுணரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

transgenders arrested for involving in robbery in namakkal

author img

By

Published : Jun 14, 2020, 4:44 PM IST

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரகுமான். கட்டடக் கலை நிபுணரான இவர், பணி நிமித்தமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சென்றுவிட்டு நேற்று முன்தினம் (ஜூன் 12) இரவு நாமக்கல் வழியாக ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.

நாமக்கல் பேருந்து நிலையம் அருகே வந்தபோது, திருநங்கைகள் இருவர் காரை மறித்து லிஃப்ட் கேட்பதுபோல் பேசினர். சிறிது நேரத்தில் காரில் இருந்த ரகுமானிடம் தகராறில் ஈடுபட்டு அவரிடம் பணம், நகைகளை பறிக்க முயற்சித்தனர். இதையடுத்து, அங்கிருந்து தப்பித்த ரகுமான் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, நாமக்கல் கொழந்தான் தெருவைச் சேர்ந்த திருநங்கை அர்ச்சனா, சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த திருநங்கை ரேகா ஆகிய இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்கள் மீது மிரட்டல் விடுத்தல், வழிப்பறியில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். நாமக்கல் பேருந்து நிலையத்தின் மேற்குப் பகுதியில் இரவு நேரங்களில் திருநங்கைகள் பலர் நின்றுகொண்டு அப்பகுதியில் செல்லும் ஆண்களிடம் ஆசைவார்த்தைக் கூறி அவர்களை தனியாக அழைத்துச் சென்று உடைமைகளை பறித்துவந்தனர்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் அளிக்காத நிலையில் திருநங்கைகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல்முறையாக ஒருவர் புகார் அளித்த நிலையில, திருநங்கைகள் இருவரை நாமக்கல் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க... ஆதரவற்ற குழந்தைகளின் தாய் திருநங்கை நூரி சலீம்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.