நாமக்கல் அடுத்த ஆண்டாபுரத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி வடிவேலின் மகன் கீர்த்திவாசன் (7). கடந்த 19ஆம் தேதியன்று சிறுவன் கீர்த்திவாசன் சாலையோரம் விளையாடி கொண்டிருந்தபோது, அவ்வழியாக சென்ற டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாக உயிரிழந்தார்.
இதில் விபத்து ஏற்படுத்திய ஆண்டாபுரத்தை சேர்ந்த ஓட்டுநர் சுப்பிரமணி டிராக்டரை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினார். இந்த விபத்து குறித்து மோகனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சுப்பிரமணித்தை தேடி வந்தனர்.
தலைமறைவான ஓட்டுநர் கைது
சுப்பிரமணியம் மோகனூர் பகுதியில் உள்ள அவருடைய உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் ஓட்டுநர் சுப்பிரமணியத்தைக் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், நீதிபதி முன்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
![போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவனின் உறவினர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-nmk-06-tractor-accident-accused-surrender-script-vis-tn10043_21122020175302_2112f_1608553382_327.jpg)
சாலை மறியல்
தலைமறைவான ஓட்டுநரை கைது செய்யக் கோரி சிறுவனின் உறவினர்கள் அரசு மருத்துவக் கல்லூரி முன்பாக, உயிரிழந்த சிறுவனின் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மருத்துவமனையில் விசாரணை கைதி உயிரிழப்பு - பொதுமக்கள் மறியல்!