ETV Bharat / state

'ஜோக்கர்' பட பாணியில் நாமக்கல்லில் பல லட்ச ரூபாய் முறைகேடு? - கழிப்பிச ஊழல்

நாமக்கல்: 'ஜோக்கர்' பட பாணியில் கட்டாத கழிவறையை கட்டியதுபோல் கணக்கு காட்டி பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் அம்பலமாகியுள்ளது.

Corruption in  toilet construction in namakkal
Corruption in toilet construction in namakkal
author img

By

Published : Dec 13, 2019, 6:34 PM IST

Updated : Dec 18, 2019, 12:28 AM IST

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'ஜோக்கர்' என்ற திரைப்படத்தில் கட்டாத கழிவறையை, கட்டியதுபோல் கணக்குக் காட்டி பல லட்ச ரூபாய் மோசடி செய்வது போன்ற காட்சிகள் இடம்பெறும். அந்தக் காட்சிகளை எல்லாம் மிஞ்சும் வகையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா முசிறி ஊராட்சியில் பல முறைகேடுகள் நடந்துள்ளன.

600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் முசிறி ஊராட்சியில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், ஊராட்சியில் கழிவறை கட்டும் திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகளின் பட்டியலைக் கேட்டுள்ளனர். அதற்கு ஊராட்சி செயலாளர் செங்குட்டுவன் முறையாகப் பதிலளிக்கவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், 2015ஆம் ஆண்டு முதல் முசிறி ஊராட்சியில் கட்டப்பட்ட கழிப்பறைகள், வெட்டப்பட்ட நீர்க்குட்டைகள் உள்ளிட்ட தகவல்களைக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். அதில் கிடைத்த தகவல் ராஜ்குமாரை மட்டுமின்றி அந்த ஊராட்சியில் வசிக்கும் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் விதத்தில் அமைந்திருந்தது

'ஜோக்கர்' பட பாணியில் நாமக்கல்லில் பல லட்ச ரூபாய் முறைகேடு

இது குறித்து ராஜ்குமர் கூறுகையில், "எங்கள் வீட்டில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறை கட்டியதாகக் கணக்குக்காட்டி ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர் ஆகியோர் 2016ஆம் ஆண்டு மோசடி செய்துள்ளனர். இதேபோல் இறந்தவர்கள் பெயரிலும், ஊரைவிட்டு வேறு ஊர்களுக்குச் சென்றவர்களின் பெயரிலும் கழிவறை கட்ட அரசு வழங்கும் பணத்தை முறைகேடு செய்துள்ளனர். இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் கேட்டபோது உரிய பதிலை தர மறுத்தார். இதுபோல 100 நாள் வேலைத்திட்டத்திலும் ஊழல் நடந்துள்ளது" என்றார்.

கழிப்பறை கட்டும் திட்டத்தில் இறந்து போனவர்கள், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஊரில் குடியில்லாதவர்கள் என்று பலரது பெயரை வைத்து மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி, சொந்த வீடுகளே இல்லாத 100-க்கும் மேற்பட்டோரின் பெயரில் கழிப்பறைக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் வீதம் பணத்தை முறைகேடாக ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

அப்பகுதியைச் சேர்ந்த கண்ணண் கூறுகையில், "கழிவறை கட்டும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலின் அடிப்படையில், கிராமசபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய சிலருக்கு மட்டும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. பல லட்சம் மதிப்புள்ள ஏழை மக்களின் பணத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த முறைகேடு அலுவலர்களின் துணையில்லாமல் நடக்க வாய்ப்பு இல்லை" என்றார்.

இது குறித்து எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்புகொண்டு கேட்டபோது, "கழிப்பறை கட்டும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் பெயருக்கு பணம் சென்றதால் பயனாளிகளுக்கு பணம் கிடைக்கவில்லை. அவரிமிருந்து பணத்தை பெற்று, இதுவரை பணத்தை பெறாத 15 பேருக்கு தலா 12 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவருக்கும் பணத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’மெட்ராஸ் வேஸ்ட் எக்சேஞ்' சென்னைக்கு புதிய திட்டம்!

Intro:ஜாக்கர் பட பாணியில் கட்டாத கழிவறையை கட்டியது போல் கணக்கு காட்டி பல லட்ச ரூபாய் மோசடி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விபரங்களில் அம்பலம், ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு, விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை .

Body:கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஜோக்கர் என்ற திரைப்படத்தில் கட்டாத கழிவறையை கட்டியது போல் கணக்கு காட்டி பல இலட்சம் மோசடி செய்வது போல் காட்சிகள் இடம் பெறும். அந்த காட்சிகளை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்கா முசிறி ஊராட்சியில் தான் பல முறைகேடுகள் நடந்துள்ளது. அவ்வூர் பொதுமக்களுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த தகவல் தான் அங்குள்ளவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் முசிறி ஊராட்சியில் கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியில் கழிவறை கட்டும் திட்டத்தில் பயனாளிகளின் பட்டியலை கேட்டுள்ளனர். அதற்கு ஊராட்சி செயலாளர் செங்குட்டுவன் முறையாக பதிலளிக்கவில்லை என தெரிகிறது. இதனையடுத்து ராஜ்குமார் என்பவர் உடனடியாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஊராட்சியில்  கட்டப்பட்ட கழிப்பறை, ஊராட்சியில் வெட்டப்பட்ட நீர்குட்டைகள் உள்ளிட்ட தகவல்களை கேட்டு மனு அளித்திருந்தார். அதில் கிடைத்த தகவல் ராஜ்குமார் மட்டுமின்றி அந்த ஊராட்சியில் வசிக்கும் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் விதத்தில் அமைந்திருந்தது. கழிப்பறை கட்டும் திட்டத்தில் இறந்து போனவர்கள், ஊரில் 10 ஆண்டுகளுக்கு மேலாக குடியில்லாத சிலர் என ஊராட்சியில் வசிக்கும் பலரின் பெயரில் கழிவறை கட்டாத, சொந்த வீடுகளே இல்லாத 100க்கும் மேற்பட்டோரின் பெயரில் கழிப்பறைக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் வீதம் பணத்தை முறைகேடாக ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மோசடியாக பெற்றிருப்பது தெரிய வந்தது.

தங்களது வீட்டில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறை கட்டுவதற்காக ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்  ஆகியோர் கடந்த 2016ம் ஆண்டு கழிவறை கட்டியதாக கூறி அரசு சார்பில் வழங்கப்படும்  ரூ 12 ஆயிரம் மோசடி செய்ததாகவும் இதேபோல் இறந்தவர்கள் பெயரிலும், ஊரைவிட்டு வேறு ஊர்களுக்கு சென்றவர்களின் பெயரிலும் கழிவறை பணத்தை முறைகேடு செய்ததாகவும் இதனை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்ததாகவும் இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம்  கேட்டபோது உரிய பதில் கூறவில்லை எனவும் பலமுறை கிராம சபைக்கூட்டத்திலும் அதிகாரிகளிடமும் எடுத்துரைத்த போது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இதுப்போன்று 100 நாள் வேலைத்திட்டத்திலும் ஊழல் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்களை பெற்ற ராஜ்குமார்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வெண்ணிலா கூறுகையில் முசிறி ஊராட்சி செயலாளர் மற்றும் அதிகாரிகள் கழிப்பறை கட்டுதல், கசிவுநீர் குட்டை அமைத்தல் அனைத்து திட்டங்களிலும் போலியான ஆவணங்கள், தகவல்களை அளித்து பல இலட்ச ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் கேட்டபோது தொடர்ந்து அலைகழிக்கப்படுவதாகவும்  இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

கழிவறை கட்டும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலின் பேரில் கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய சிலருக்கு பணம் கொடுத்த நிலையில் ஏழை மக்களின் பணம் பல இலட்சம் முறைகேடு செய்துள்ளதாகவும், இந்த முறைகேடு அதிகாரிகளின் துணையில்லாமல் நடக்க வாய்ப்பு இல்லை என்றும், இதுகுறித்து முழுமையாக விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் அப்பகுதியை சேர்ந்த கண்ணன்.

இதுகுறித்து எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு கேட்ட போது  சம்பந்தப்பட்ட ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போது இது குறித்து கேள்வி எழுப்ப பட்டதன் அடிப்படையில் கழிப்பறை கட்டும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் பெயருக்கு பணம் சென்றதால் பயனாளிகளுக்கு பணம் கிடைக்க வில்லை என்றும், அவரிமிருந்து பணத்தை பெற்று இதுவரை பணம் கிடைக்க பெறாத பயனாளிகள் 15 பேருக்கு தலா 12 ஆயிரம் வீதம் கழிப்பறைக்கு பணம் வழங்கப் பட்டுள்ளதாகவும்,  மீதமுள்ளவருக்கும் பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Conclusion:
Last Updated : Dec 18, 2019, 12:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.