ETV Bharat / state

நாமக்கல்லில் உடல் உறுப்பு தானம் செய்த ஆசிரியை உடல் அரசு மரியாதையுடன் உடல் தகனம்! - செய்த முதல் அரசு ஊழியர்

Namakkal teacher organ donation: சாலை விபத்தில் உயிரிழந்த நாமக்கல்லை சேர்ந்த பள்ளி ஆசிரியையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 10:36 PM IST

நாமக்கல்லில் உடல் உறுப்பு தானம் செய்த ஆசிரியை உடல் அரசு மரியாதையுடன் உடல் தகனம்

நாமக்கல்: திருச்செங்கோடு ஒன்றியம் தோக்கவாடி குச்சிபாளையம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது கணவர் ஈஸ்வரன். மஞ்சுளா, ஆலாம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் மஞ்சுளா கடந்த 3 ஆம் தேதி எஸ்.பி.பி. காலனி வாய்க்கால் பாலம் பகுதியில் காலை 8.30 மணி அளவில் பணிக்கு சென்றபோது, இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து ஆசிரியை மஞ்சுளாவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதனையடுத்து மஞ்சுளாவின் கண் சிறுநீரகம், இதயம், தோல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் முதல் உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் இவரே ஆவார். இதனால், தமிழ்நாடு அரசு ஆணைப்படி இவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (நவ.5) அடக்கம் செய்யப்பட்டது. அதன்படி மாவட்ட ஆட்சியர் உமா, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, திருச்செங்கோடு துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சார்பில் அவரது இல்லத்தில் அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பிறகு முழு அரசு மரியாதையுடன் ஆசிரியர் மஞ்சுளாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா கூறுகையில், 'பல்வேறு உயிர்கள் வாயிலாக ஆசிரியர் மஞ்சுளா நம்முடன் வாழ்ந்து வருகிறார். இருந்தபோதிலும் இதுபோன்ற ஒரு அரசு பள்ளி ஆசிரியர் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்துக்குள்ளானது மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. எனவே, இனி ஒரு சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் இதுபோல, நடைபெறாமல் இருக்க, மக்கள் ஹெல்மெட் அணிவது அவசியம்' என தெரிவித்தார்.

இது தொடர்பாக அவரது கணவர் ஈஸ்வரன் கூறும்போது, 'பல்வேறு பெரும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றோம் காப்பாற்ற முடியாது என்று தெரிந்தது. இந்நிலையில் பெருந்துறை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இதய துடிப்பு நிற்க சிலமணி நேரங்களே இருந்த போது, விரைந்து செயல்பட்டு தனது மனைவியின் உறுப்புகளை மற்ற நபர்களுக்கு மாற்றி அவர்கள் உயிர் வாழ ஏற்பாடு செய்தது மிகுந்த மனநிறைவு தந்தது' என உருக்கத்துடன் கூறினார். இதற்காக, மாவட்ட நிர்வாகம் தரப்பில் அனைத்து உதவிகளும் உடனடியாக செய்து கொடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மூளைச்சாவு அடைந்த பள்ளி ஆசிரியை உடல் தானம்; அரசு மருத்துவர்கள், பொதுமக்கள் ஆசிரியை உடலுக்கு மரியாதை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.