ETV Bharat / state

நாமக்கல் சாலையோர வியாபாரிகள் கூட்டம் - முதலமைச்சர் பங்கேற்பு - பட்டியலின சமூகத்தினர் வீட்டில் தேநீர்

நாமக்கல்லில் நடைபெற்ற சாலையோர வியாபாரிகள் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

tn cm edapadi started his second phase election propaganda in namakkal district

author img

By

Published : Dec 29, 2020, 11:20 AM IST

நாமக்கல்: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையை நாமக்கல் மாவட்டத்தில் தொடங்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

tn cm edapadi started his second phase election propaganda in namakkal district
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம்

இந்நிலையில், காலை நாமக்கல் மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் வழிபட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து சாலையோர வியாபாரிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், "ஏழை, எளிய மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அதிமுக ஆட்சி செயல்பட்டுவருகிறது. சாலையோர கடை வியாபரிகளுக்கு மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடன் வழங்கப்பட்டுவருகிறது.

வங்கி மூலம் கடன் பெற்று வாழ்வாதாரத்தைப் பெருக்க மத்திய கூட்டுறவு வங்கியை வியாபாரிகள் அணுகலாம். மத்திய வங்கி மூலம் கடன் பெறுவோர், அதனைப் படிப்படியாகவும் செலுத்தலாம். சேலம் கூட்டுறவு வங்கி சிறப்பாகச் செயல்பட்டு மக்களுக்குத் தேவையான கடன் உதவிகளை வழங்கிவருகிறது.

திமுகவைத் தாக்கிய இபிஎஸ்

சில கட்சியினர் கடை உரிமையாளர்களைத் தாக்குவர். அதனை வியாபாரிகளான நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் என்னுடைய மாவட்டத்திலும் நடைபெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திற்கு எண்ணற்றத் திட்டங்களை அதிமுக அரசு செய்துள்ளது. 2011ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மூலம் நாமக்கல் சிறப்பாக உள்ளது" என்றார்.

இதனைத் தொடர்ந்து, முதலைப்பட்டியை அடுத்த அண்ணா நகர் அருந்ததியர் காலனியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடந்தே சென்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது வழி நெடுகிலும் பெண்கள் ஆராத்தி எடுத்து அவரை வரவேற்றனர்.

பின்னர், முதலமைச்சர் அதே பகுதியில் உள்ள பட்டியலினத்தைச் சேர்ந்த விவேக் குமார் என்பவரது வீட்டிற்கு சென்று தேநீர் அருந்தினார். அவருடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உடனிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.