நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதிகளில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து உணவுப் பாதுகாப்புத்துறை வட்டாட்சியர், நரசிம்மன்தெரு பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் 2 டன் ரேசன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக கடத்தல் ரேசன் அரிசியை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட சக்திவேல் (44), விக்னேஷ் (20), சக்திவேல் (24) ஆகியோரைக் கைது செய்தனர்.
தொடர்ந்து கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரனையில், ரேசன் அரிசியை கடத்தி கோழிப்பண்ணைகளுக்கு விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் டிராக்டர் விற்பனை அதிகரிக்க என்ன காரணம்?