ETV Bharat / state

அதிமுகவினர் வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்த சேலைகள் பறிமுதல்! - Namakkal DMK

நாமக்கல்: திருச்செங்கோட்டில் பொதுமக்களுக்கு அதிமுகவினர் கொடுக்க முயன்ற சேலைகள் பறிமுதல்செய்யப்பட்டது. திமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவினர் வாக்காளர்களுக்கு  வழங்க வைத்திருந்த சேலைகள் பறிமுதல்

author img

By

Published : Mar 27, 2021, 10:40 PM IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மல்லசமுத்திரம் ஒன்றியம் பள்ளக்குளியில் ஆட்டோ ஒன்றில் சுமார் 10 சாக்குப்பை மூட்டை லோடுகளை, முன்னாள் அதிமுக பள்ளக்குழி ஊராட்சித் தலைவர் காந்திமதி செல்வகுமார் வீட்டில் இறக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு திமுகவினர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மூட்டைகளைப் பிரித்து பார்த்தபோது, அதில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த சேலைகள் எனத் தெரியவந்தது.

இதனையடுத்து நாமக்கல் மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ் சம்பவ இடத்திற்குவந்து சேலைகள் கொடுப்பதைத் தடுத்து நிறுத்த முற்பட்டபோது, இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, அங்குவந்த சரவணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், காவல் துறையினர் சேலை மூட்டைகளைப் பறிமுதல்செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.