ETV Bharat / state

சரக்கு ரயில் மூலம் காலி லாரிகளை கொண்டுச் செல்ல சோதனை

author img

By

Published : Aug 6, 2020, 4:30 PM IST

நாமக்கல்: வெளி மாநிலங்களுக்கு காலியாக செல்லும் லாரிகளை சரக்கு ரயில்கள் மூலமாக கொண்டுச் செல்ல ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

லாரிகள்
லாரிகள்

ரிக் - லாரி உரிமையாளர்கள் கடந்த 15 வருடங்களாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் காலியான லாரிகளை சரக்கு ரயில்கள் மூலமாக கொண்டுச் செல்ல அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கும் ரயில்வே நிர்வாகத்திற்கும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த கோரிக்கைக்கு ரயில்வே நிர்வாகம் ஜூலை மாதம் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து, முதல்கட்டமாத ஜூலையில் ரிக் வண்டிகளை ரயில்வே வேகன்களில் ஏற்றும் போது மின்கம்பிகளில் உரசுமா? இதற்காக பிரத்யேக வேகன்கள் தயாரிக்க வேண்டுமா? அல்லது தற்போதைய வேகன்களின் உயரத்தை குறைக்க வேண்டுமா? என ஆய்வுகள் செய்ய நான்கு வகையான ரிக் வண்டிகள் ரயில் வேகன்களில் ஏற்றி பரிசோதிக்கப்பட்டன.

அதில் இரண்டாவது கட்டமாக இன்று (ஆகஸ்ட் 6) வட மாநிலங்களுக்கு அதிகமாக செல்லக் கூடிய ரிக் வாகனங்களை வழக்கமான வேகன், உயரம் குறைவான வேகன் என இரண்டு விதமான வேகன்களில் ஏற்றி பரிசோதிக்கப்பட்டது. வழக்கமான வேகனை விட உயரம் குறைவாக உள்ள வேகனில் ரிக் வாகனங்களை ஏற்றிச் செல்வது சரியாக இருக்கும் என கணிக்கப்பட்டது. செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என ரயில்வே துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இந்த நடைமுறை செயல்பாட்டிற்கு வந்தால் லாரிகள் வெளி மாநிலங்களுக்கு செல்லும் போதும் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் போதும் சாலை வழியாக வரும் போது ஏற்படும் டீசல் செலவு, சுங்கச்சாவடி செலவு, வெளி மாநில வரிகள் செலவு மற்றும் இதர செலவுகள் என 35 விழுக்காடு செலவுகளை மீதமாக்கும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கந்தசாமி, செயலாளர் அசோக்குமார், பொருளாளர் சந்தர்ராஜன் துணைத் தலைவர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள், ரயில்வே துறை அலுவலர்கள் என பலரும் உடனிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.