நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மலையைச் சுற்றி 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் மெகராஜை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், "திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 32 மற்றும் 33ஆவது வார்டு பகுதிகளில் தாங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். ஆனால், தற்போது மலையைச் சுற்றியுள்ள சாலையை அகலப்படுத்தும் பணிக்காக நாங்கள் 50 ஆண்டு காலங்களாக வசிக்கும் வீடுகளை இடிக்க அலுவலர்கள் முற்படுகிறார்கள்.
கரோனா நெருக்கடி காலத்தில் வேறு பகுதிக்குச் செல்ல வழியில்லாத நிலை உள்ளது. எனவே, வீடுகளை இடிக்கும் பணியை அரசு கைவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.