நாமக்கல் நகராட்சியில் மக்கள் பொழுது போக்கிற்காக அம்மா பூங்கா, எம்.ஜி.ஆர் பூங்கா, நேரு பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு உள்ள பூங்காக்களிலேயேபிரதான பூங்காவாக விளங்கும் நேரு பூங்கா அடிக்கடி திறக்கப்படாமல் பூட்டியே உள்ளது. இதனால், பூங்காவிற்கு ஆர்வத்துடன் வரும்பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே நகராட்சி நிர்வாகம் இந்த பூங்காவை திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.