ETV Bharat / state

600 காளைகள், 500 காளையர்கள்: களைகட்டிய குமாரபாளையம்! - ஜல்லிக்கட்டு 2020

நாமக்கல்: குமாரபாளையத்தில் 600-க்கும் மேற்பட்ட காளைகளுடன்  ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டினை தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

KUMARAPALAIYAM JALLIKATTU
குமாரப்பாளையம் ஜல்லிக்கட்டு
author img

By

Published : Jan 25, 2020, 6:36 PM IST

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும்விதமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 600-க்கும் மேற்பட்ட காளைகளுடன் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் காளை உள்பட மற்ற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான காளைகளும், சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டு களமாடினர்.

KUMARAPALAIYAM JALLIKATTU
காளையை அடக்க முயற்சிக்கும் காளையர்கள்

போட்டியின்போது, காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்குப் போட்டி வளாகத்தில் அமைக்கப்பட்ட அவசர சிகிச்சை மையத்தில் உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் அமைச்சர்கள் தங்கக் காசு, பீரோ, கட்டில், பாத்திரங்கள், சைக்கிள் போன்ற பரிசுப் பொருள்களை வழங்கினர்.

களைகட்டிய குமாரபாளையம் ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுப் போட்டியினைக் காண அம்மாவட்ட மக்கள் மட்டுமல்லாது, மற்ற மாவட்டங்களிலிருந்தும் மக்கள் குவிந்தனர். போட்டியின் சிறப்பு விருந்தினர்களாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ’ஜல்லிக்கட்டு போராட்டம் வழக்கை கைவிடுக’ - தமிழ்நாடு அரசிற்கு முகிலன் கோரிக்கை

Intro:நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 600-க்கும் மேற்பட்ட காளைகளும் 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு. ஒரு காவல் உதவியாளர் உள்பட 15 பேர் காயம்.Body:நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் சார்பில் அரசு அனுமதியுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று-25.1.2020 நடைபெற்றன. இதனை மாநில மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த போட்டியில், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வளர்ப்பு காளைகள் உள்பட நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை  மாவட்டத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டு களமாடின. 500 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட 15-க்கும் மேற்பட்டோருக்கு காயமடைந்தனர்.  போட்டி வளாகத்தில் அமைக்கப்பட்ட அவசர சிகிச்சை மையத்தில் உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. மாடுகளை பிடித்தவர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் தங்கக் காசு, பீரோ, கட்டில், பாத்திரங்கள், சைக்கிள், உள்ளிட்ட பரிசுகளை அமைச்சர்கள் வழங்கினர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியைக் காண நாமக்கல், ஈரோடு, சேலம் சுற்று வட்டாரத்தில் இருந்துவந்து, ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.