இரு கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வை கிரகங்களின் இணைவு என்பர். சூரிய குடும்பத்தின் இருபெரும் கிரகங்களான வியாழனும், சனியும் இணையும் நிகழ்வை பேரிணைவு என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
அந்த வகையில் இன்று நிகழ்ந்த பேரிணைவின் போது, இரு கிரகங்களும் இணைந்து ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல வானில் தோன்றியது. இதனை கடலூரின் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட தொலைநோக்கியில் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
நாமக்கல்லில்..
வியாழன், சனி ஆகிய இருகிரங்களும் ஒரே நேர்கோட்டில் 735 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் நேற்று பூமிக்கு மிக அருகாமையில் வந்தது. ஒரே நேர்க்கோட்டில் இருகிரங்களும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு இருப்பது போன்று பிரகாசமாக காட்சியளித்ததை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
நாமக்கல் பூங்கா சாலையில் வானில் நடைபெற்ற அதிசய நிகழ்வை மக்கள் கூட்டமாக நின்று கண்டு ரசித்தனர். சிலர் அந்த காட்சிகளை தங்களது செல்போனில் படம் பிடித்து சென்றனர். வெகுசிலர் இதனை 400 ஆண்டுகளுக்கு பின்னர் தென்படும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் எனவும் குறிப்பிட்டு சிலாகித்தனர்.
800 ஆண்டுகளுக்கு பின், வியாழன் சனி கோள்களின் பேரிணைவு தோன்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:800 ஆண்டுகளுக்கு பின் நிகழும் 'வியாழன், சனி' கோள்களின் பேரிணைவு!