ETV Bharat / state

பள்ளியில் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியர்: நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் போர்க்கொடி...! - நாமக்கல்

நாமக்கல்: பள்ளிக் கழிவறையில் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியர் மற்றும் அங்கன்வாடி பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கும்வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என, பெற்றோர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

teacher attack
author img

By

Published : Sep 12, 2019, 2:29 PM IST

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்த எஸ்.உடுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் அங்கன்வாடி மையமும் இயங்கி வருகிறது. இங்கு, புதன்சந்தையைச் சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த நான்கு வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கும் அங்கன்வாடி பொறுப்பாளர் ஜெயந்திக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

teacher attack
teacher attack

இதனிடையே, ஆசிரியர் சரவணனும் அங்கன்வாடி பொறுப்பாளர் ஜெயந்தியும் பள்ளிக் கழிவறையில் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதைக்கண்ட பள்ளி மாணவர்கள், தங்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியரிடம் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். பின்னர், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயராஜ், சம்பந்தப்பட்ட இருவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், ஆசிரியர் சரவணனும் அங்கன்வாடி பொறுப்பாளர் ஜெயந்தியும் மீண்டும் பள்ளி வளாகத்திலே தகாத உறவில் ஈடுபட முயன்றதாகத் தெரிகிறது. இதையறிந்த பெற்றோர்கள், ஆசிரியர் சரவணனை கடுமையாக தாக்கினர்.

teacher attack

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த புதுச்சத்திரம் வட்டாரக் கல்வி அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பள்ளி வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்வரை தங்களது குழந்தைகளை பள்ளி மற்றும் அங்கன்வாடிக்கு அனுப்பமாட்டோம் என, பெற்றோர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Intro:பள்ளி கழிவறையில் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியர் மற்றும் அங்கன்வாடி பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கும்வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் -உடுப்பம் பெற்றோர்கள் திட்டவட்டம்

Body:பள்ளி கழிவறையில் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியர் மற்றும் அங்கன்வாடி பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கும்வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் -உடுப்பம் பெற்றோர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்த எஸ்.உடுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த நான்கு வருடங்களாக பள்ளி ஆசிரியராக புதன்சந்தையை சேர்ந்த சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அங்கன்வாடி பொறுப்பாளராக இருக்கும் ஜெயந்திக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பள்ளிவளாகத்திலே ஆசிரியர் சரவணனும் அங்கன்வாடி பொறுப்பாளர் ஜெயந்தியும் பள்ளி கழிவறையில் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட  பள்ளி மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயராஜ் சம்பந்தப்பட்ட இருவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் பள்ளியின் ஆசிரியர் சரவணனும் அங்கன்வாடி பொறுப்பாளர் ஜெயந்தியும் பள்ளி வளாகத்திலே தகாத உறவில் ஈடுபடமுயன்றதாக தெரிகிறது. இதனையறிந்த ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று பள்ளியில் இருந்த ஆசிரியர் சரவணன் வகுப்பறைக்கு சென்று அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

இந்நிலையில் இன்று பள்ளிக்கல்விதுறை சார்பில் புதுச்சத்திரம் வட்டார கல்வி அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை கொண்ட குழுவினர் சார்பில் எஸ்.உடுப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் சத்துணவு அமைப்பாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் வரை தங்களது குழந்தைகளை பள்ளி மற்றும் அங்கன்வாடிக்கு அனுப்பமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் பள்ளி மற்றும் அங்கன்வாடிக்கு மாணவர்கள் செல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.