நாமக்கல்: நாமக்கல் அடுத்துள்ள பொன்நகர் பகுதியில் பெரியசாமி (38) என்பவர் மாருதி டேங்கர் வெல்டிங் என்ற பெயரில் பட்டறை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று (அக்.09) மாலை வழக்கம் போல் பழுதான டேங்கர் லாரி ஒன்றுக்கு வெல்டிங் வைத்துக்கொண்டிருந்தார்.
கொடூர விபத்து
அப்போது டேங்கரில் எரிபொருள் இருப்பது தெரியாமல் வெல்டிங் வைத்தபோது, டேங்கர் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறி எரியத் தொடங்கியது. இதில் வெல்டிங் வைத்துக்கொண்டிருந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே தலை சிதறி உயிரிழந்தார்.
இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்படி, அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து, பெரியசாமி உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நாமக்கல் காவல் துறையினர் எரிபொருள் உள்ள டேங்கர் லாரியைப் பழுது நீக்குவதற்கு, ஒப்படைத்த லாரியின் உரிமையாளரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை;பொதுமக்கள் அதிர்ச்சி!