சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய, இந்தியன் வங்கி சார்புடைய தமிழ்நாடு கிராம வங்கியின் விரிவாக்கப்பட்ட புதிய வட்டார அலுவலகம் திறப்பு விழா நாமக்கல் மாவட்டம் மோகனூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது 2,230 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்விழாவில் இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் எம்.கே.பட்டாச்சார்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர், 2,230 பயனாளிகளுக்கு சுய உதவி குழு கடன்களும், தனி நபர்களுக்கான வீடு, வாகன கடன் என சுமார் 11 கோடியே 78 லட்சம் ரூபாய்க்கான கடனுதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து விழாவில் பேசிய பட்டாச்சார்யா, "கரோனா காலத்தில் வங்கிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தற்போது அந்த பாதிப்பில் இருந்து வங்கிகள் மீண்டு வருகிறன. இக்கால கட்டத்தில் கிராம மக்கள், சிறுகுறு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட, தமிழ்நாடு கிராம வங்கி அதிகளவு கடனுதவி வழங்கி உள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில்தான் அதிகமாக சிறுபான்மையின மாணாக்கருக்கு கடனுதவி!