நாமக்கல்-திருச்சி மாவட்ட எல்லையான எம்.மேட்டுப்பட்டி சோதனைச்சாவடியில் திருச்சியிலிருந்து வரும் வாகனங்கள் இ-பாஸ் இல்லாமலும் சோதனை செய்யப்படாமலும் அனுமதிக்கப்படுவதாக தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகின.
அதனால் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் காந்தி, கோட்டாட்சியர் கோட்டைக்குமார் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நாமக்கல் சோதனைச்சாவடியில் கல்லாகட்டும் காவலர்கள்
அந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் ஆயுதப்படை காவலர் பிரபுதேவா என்பவர் பணம் பெற்றுக்கொண்டு வாகனங்களை அனுமதித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அவரை காவல் கண்காணிப்பாளர் அருளரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பணம் பெற்று மாவட்டத்திற்குள் வாகனங்களை அனுமதித்த விவகாரம்: காவலர்களிடம் விசாரணை