நாமக்கல் மாவட்டம், மோகனூரில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டுவருகிறது. இந்த ஆலையில் 2020-21 ஆண்டுக்கான கரும்பு அரவை இன்று (நவ.21) தொடங்கி உள்ளது. அதனை கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சங்கத் தலைவர் சுரேஷ்குமார் தொடங்கிவைத்தார்.
அதில் விவசாயிகள், கூட்டுறவு சங்க அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த சர்க்கரை ஆலையில் 930 ஏக்கர் நடவு கரும்பு, 2,009 ஏக்கர் கட்டை கரும்பு என மொத்தம் 29,39 ஏக்கர் கரும்பு அரவைக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அருகிலுள்ள மற்ற ஆலைகளில் உபரி கரும்பினையும் அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசு அறிவிக்கும் தொகை, கரும்பு கட்டுப்பாடு சட்டப்படி கரும்பு வெட்டி அனுப்பிய 14ஆவது நாள் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தாண்டு 1 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது என ஆலை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அரியலூரில் கரும்பு நடவுக்கு புதிய இயந்திரம் அறிமுகம்!