ETV Bharat / state

முறைகேடுகளை அம்பலப்படுத்திய நபருக்கு கொலை மிரட்டல் - ஆட்சியர்டம் மனு - சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்

நாமக்கல்: ஊராட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் சமூக செயற்பாட்டாளர் மனு அளித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சமூக ஆர்வலர்
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சமூக ஆர்வலர்
author img

By

Published : Jan 14, 2020, 12:11 PM IST

நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டையை அடுத்த திம்மநாயக்கன்பட்டி ஊராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக, கழிவறை கட்டுதல், பசுமை வீடு கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற்றுள்ளார்.

அந்தத் தகவலின் அடிப்படையில் கடந்த ஆகஸ்டு மாதம் கிராம சபைக் கூட்டத்தில், முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்பி, அதன் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களிடம் வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் அந்த ஊராட்சியின் செயலாளர் கருணாகரன் பணி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

சமூக ஆர்வலர் செல்வராஜ்
சமூக ஆர்வலர் செல்வராஜ்

இந்நிலையில், நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் செல்வராஜ், முன்னாள் தலைவர் ராமசாமி உள்ளிட்ட ஆறு பேர் திம்மநாயக்கன்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டனர். இதில் செல்வராஜ் தோல்வியடைய, ராமசாமி வெற்றி பெற்றார். இந்தச் சூழலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான ராமசாமி, செல்வராஜின் உறவினர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, செல்வராஜை அமைதியாக இருக்குமாறும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது எனவும் கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சமூக ஆர்வலர்

இதனையடுத்து தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் கொலை செய்யும் வகையில் தொலைபேசியில் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்தார்.

இதையும் படிங்க: அதிமுக ஒன்றியக் கவுன்சிலரை கொலை செய்ய முயற்சி - 4 பேர் கைது

Intro:நாமக்கல் அருகே ஊராட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலபடுத்திய சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் உரிய பாதுகாப்பு வழங்கி நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.Body:நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை அடுத்த திம்மநாயக்கன்பட்டி ஊராட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ஊராட்சியில் கழிவறை கட்டுதல், பசுமை வீடு கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்து அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் கடந்த ஆகஸ்டு மாதம் கிராம சபை கூட்டத்தில் முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்பி அதன் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வற்புறுத்தினார்.

இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் அந்த ஊராட்சியின் செயலாளர் கருணாகரன் பணி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்தும் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் செல்வராஜ், முன்னாள் தலைவர் இராமசாமி உள்ளிட்ட 6 பேர் திம்மநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் செல்வராஜ் தோல்வி அடைய இராமசாமி வெற்றி பெற்றார். இந்த சூழ்நிலையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இராமசாமி, செல்வராஜீன் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தொலைபேசி வாயிலாக பேசி செல்வராஜை அமைதியாக இருக்குமாறும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க கூடாது எனவும், அவரை பொது பிரச்சனையில் தலையிட கூடாது என கூறி கொலை மிரட்டல் விடுப்பததாக தெரிகிறது. இதனையடுத்து தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும், தன்னை கொலை செய்யும் வகையில் தொலைபேசியில் பேசும் அந்த நபர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.