நாமக்கல் மாவட்டம் பொம்மை குட்டை மேட்டில் ஜனவரி 28ஆம் தேதி அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதற்காக பொம்மைகுட்டை மேட்டில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டது. அப்போது மேடையின் மிக அருகே நாமக்கல் ஆயுதப்படையை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தார். இந்த விழாவின் இறுதியில் தேசீய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது சிவப்பிரகாசம் எழுந்து நிற்காமல் அமர்ந்தபடியே செல்போன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
தேசீய கீதம் ஒலிப்பதை கூட அறியாமல் செல்போன் பேசிக்கொண்டு இருந்த சிவபிரகாசத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது. அதைத்தொடர்ந்து சிவபிரகாசத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் இருந்து தாளவாடி வனப்பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள்