நாமக்கல் மாவட்டம் நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் லாரி அதிபர் பொன்னுசாமியுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ. 50 ஆயிரம் முதல் 50 லட்சம் வரை மாதந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.
2019ஆம் ஆண்டு கலைச்செல்வி ஏலச்சீட்டிற்கு பணம் கொடுத்த நபர்களை ஏமாற்றி, தனது உறவுக்கார பெண்ணான மலர்கொடி என்பவர் பெயரில் பல கோடி சொத்துக்களை வாங்கியதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நபர்கள் பணத்தை கலைச்செல்வியிடம் கேட்டனர். அதற்கு அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்நிலையில் கலைச்செல்வியிடம் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் இன்று (டிச.19) நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: போலி ஆவணங்கள் மூலம் வங்கிகளில் கோடிக் கணக்கில் மோசடி செய்த தம்பதி!