நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளவர் சி.சந்திரசேகரன். அதிமுகவை சேர்ந்த இவர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட கொல்லிமலையில் உள்ள செம்மேடு என்ற இடத்தில் சந்திரசேகரன் தனது ஆதரவாளர்கள் 200க்கும் மேற்பட்டோருடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சந்திரசேகரன் கூறுகையில், “2001 முதல் 2016ஆம் ஆண்டு வரை சேர்மன் ஆக இருந்து அதிமுக கட்சிக்கு பணியாற்றியதால் 2016ஆம் ஆண்டு சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பளித்தார்.
தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரன் கொல்லிமலை மக்களை சந்திப்பதை விட, அமைச்சர் தங்கமணியை சந்திப்பதை மட்டுமே வாடிக்கையாக வைத்தவர். மாவட்ட அமைச்சர் தங்கமணி ராணுவ அதிகாரி போல் செயல்பட்டு வருகிறார்.
மூன்று நாள்களுக்குள் வேட்பாளரை மாற்றாவிட்டால் சேந்தமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவேன்.மக்கள் என் பக்கம் உள்ளனர். நிச்சயமாக சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெறுவேன்” என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து களமிறங்கும் திமுக வேட்பாளர்