நாமக்கல் பேருந்து நிலையத்தில் நகராட்சிக்குச் சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றில் வணிக நிறுவனங்கள், உணவகங்கள், பழக்கடைகள் இயங்கிவருகின்றன. இவற்றில் ஒன்பது கடைகளின் உரிமையாளர்கள், கடந்த சில மாதங்களாக நகராட்சி நிர்வாகத்துக்கு முறையாக வாடகை செலுத்தாமல் பாக்கிவைத்துள்ளனர்.
இந்நிலையில், 12 லட்சம் ரூபாய்க்கும் மேல் நீண்ட நாள்களாக வாடகை பாக்கிச் செலுத்தாததால், வாடகை வசூல் செய்வதற்கு நகராட்சி அலுவலர்கள் பலமுறை நோட்டீஸ் வழங்கியும், கடை உரிமையாளர்கள் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனிடையே, நகராட்சி அலுவலர்கள் நேரடியாக இன்று பேருந்து நிலையம் சென்று, கடைகளைப் பூட்டி சீல்வைத்தனர்.
அதுமட்டுமல்லாமல் பேருந்து நிலையத்துக்குள் பயணிகளுக்கு இடையூறாக ஆக்கிரமிப்புச் செய்த கடைகளையும் அப்புறப்படுத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அரசுக் கலைக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் புதிய ஷிப்ட் முறை அறிமுகம்!