நாமக்கல் மாவட்ட ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், அரசு அலுவலர்களின் ஆய்வு கூட்டம் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (அக்.10) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் தலமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு சேகோ சர்வ் தலைவர் தமிழ்மணி, ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் ஜவ்வரிசியில் கலப்படத்தை தடுக்க வேண்டும், மரவள்ளி கிழங்கிற்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்மணி, "தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளில் வருகின்ற தீபாவளி பண்டிகைக்குள் ஜவ்வரிசி விற்பனை தொடங்கும். அதற்காக ஜவ்வரிசியினை பொட்டலங்கள் கட்டும் பணி தீவரமாக நடைப்பெற்று வருகிறது. ஜவ்வரிசியினை நியாயவிலை கடைகளில் வழங்கும் பணியினை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்” என்றார்.
இதையும் படிங்க:வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு காரணமாக கனமழைக்கு வாய்ப்பு