நாமக்கல்: மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த் துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சி துறைகளுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மின் துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா கலந்துகொண்டு, மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து, நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மின் துறை அமைச்சர் தங்கமணி, அதிமுகவின் வழிகாட்டு குழுவின் அதிகாரம் குறித்து எப்போதும் சொல்ல வேண்டுமோ, அப்போது தலைவர்கள் தெளிவாக சொல்வர்.
விவசாய மின் இணைப்பிற்கு தட்கல் திட்டத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். இதுவரை 30 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட அமைச்சர் சரோஜா, அமைப்பாளர், சமையலர் பணியிடங்களுக்கு அதிகளவு விண்ணப்பங்கள் வரப்பெற்றதால் அதிகளவு கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு சத்துணவு பணியிடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.