ETV Bharat / state

கப்பலில் சிக்கிக்கொண்ட மகனை மீட்டுத் தாருங்கள்: முதலமைச்சர், பிரதமருக்கு கோரிக்கை - இன்ஜீனியர்

நாமக்கல்: இங்கிலாந்து அரசால் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் பணியாற்றும் தங்களது மகன் நவீன் குமாரை மீட்டுத்தரக் கோரி பெற்றோர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கும், பிரதமருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

marine engineer
author img

By

Published : Jul 29, 2019, 3:53 PM IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (58) மட்டன் ஸ்டால் வைத்துள்ளார். இவரது மனைவி கலைமணி (45) இவர்களுக்கு நவீன் குமார் (26) என்ற மகனும், பிரியதர்ஷினி (23) என்ற மகளும் உள்ளனர். நவீன் குமார் மெரைன் இன்ஜினியரிங் படித்துவிட்டு மும்பையில் உள்ள கதீஜா ஷிப் மேனேஜ்மெண்ட் என்ற நிறுவனத்தில் கிரேடு இன்ஜினியராக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்துவருகிறார்.

நாமக்கல்
நவீன் குமார்

இவர் கடந்த சில தினங்களுக்கு முன் சிரியாவுக்கு கச்சா எண்ணை ஏற்றிச்செல்லும் ஒரு கப்பலில் ஷார்ஜாவில் இருந்து பணிக்கு சென்றுள்ளார்.

ஈரான் நாட்டிற்கு பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் இங்கிலாந்து கடல் பகுதியான ஜிப்ரால்டர் பகுதியில் இந்தக் கப்பலை கடந்த 7ஆம் தேதி இங்கிலாந்து அரசு சிறை பிடித்தது.

கப்பலில் சிக்கிக்கொண்ட நவீன் குமாரின் பெற்றோர்

இந்நிலையில், நவீன் குமார் சென்ற கப்பல் சிறைபிடிக்கப்பட்டது குறித்து ஜீவானந்தம், கலைமணி தம்பதியனர் கூறுகையில், ”சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் எங்கள் மகன் நவீன் குமார் பத்திரமாக இருக்கிறார். உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கிறது. தூதரகத்தில் இருந்து வந்து சந்தித்து செல்கிறார்கள் எனவும் அவர் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார். எனினும் 21 நாட்கள் ஆகிவிட்டதால் எங்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. இதை தாங்கிக்கொள்ளும் மனநிலை எங்களுக்கு இல்லை. எனவே இந்த விஷயத்தில் தலையிட்டு எங்களது மகனை மீட்டுத்தர தமிழ்நாடு முதலமைச்சர், இந்திய பிரதமர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Intro:சிரியாவுக்கு சென்ற கப்பல் இங்கிலாந்து அரசால் சிறைபிடிப்பு 21 நாட்களாக விடுவிக்கப் படாததால் இதில் பணியாற்றும் திருச்செங்கோட்டை சேர்ந்த நவீன் குமார் என்ற இன்ஜினியரை மீட்டுதர தமிழக முதல்வர் மற்றும் இந்திய பிரதமருக்கு பெற்றோர்கள் கோரிக்கை

Body:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் ஜீவானந்தம் (58) மட்டன் ஸ்டால் வைத்துள்ளார். இவரது மனைவி கலைமணி (45) இவர்களுக்கு நவீன் குமார் (26) என்ற மகனும் பிரியதர்ஷினி (23) என்ற மகளும் உள்ளனர். நவீன் குமார் மெரைன் இன்ஜினியரிங் படித்த விட்டு மும்பையில் உள்ள கதீஜா ஷிப் மேனேஜ்மெண்ட் என்ற நிறுவனத்தில் 3rd கிரேடு இன்ஜினியராக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் சிரியாவுக்கு கச்சா எண்ணை ஏற்றி  செல்லும் ஒரு கப்பலில்  ஷார்ஜாவில் இருந்து பணிக்கு சென்றுள்ளார்.

ஈரான் நாட்டிற்கு பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் இங்கிலாந்து கடல் பகுதியான ஜிப்ரால்டர் பகுதியில் இந்த கப்பலை கடந்த 7 ம் தேதி இங்கிலாந்து அரசு சிறை பிடித்துள்ளது. இந்த கப்பலில் பணியாற்றும் திருச்செங்கோட்டை சேர்ந்த நவீன்குமார் என்பவரை மீட்டுத்தர வேண்டும் என தமிழக முதல்வர் மற்றும் இந்திய பிரதமருக்கு பெற்றோர்கள் கோரிக்கை  வைத்தனர்.

இது குறித்து ஜீவானந்தம் மற்றும் கலைமணி தம்பதியனர் கூறுகையில் அவர்கள் கூறியதாவது. சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் தங்களது மகன் நவீன் குமார் பத்திரமாக இருப்பதாகவும் உணவு மற்றும் அனைத்து வசதிகளும் கிடைப்பதாகவும் தூதரகத்தில் இருந்து வந்து சந்தித்து செல்கிறார்கள் எனவும் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார். எனினும் 21 நாட்கள் ஆகிவிட்டதால் தங்களுக்க பயமாக இருப்பதாகவும் இதை தாங்கி கொள்ளும் மனநிலை என கூறினார்கள். மேலும் இந்த விஷயத்தில் தலையிட்டு தங்களது மகனை மீட்டுத் தர தமிழக முதல்வர் மற்றும் இந்திய பிரதமர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைத்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.