நாமக்கல், தூத்துகுடி, மதுரை, ராணிப்பேட்டை, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி கொண்டு கடந்த மாதம் குஜராத் சென்ற நிலையில், கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் தமிழநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்ற 48 லாரி ஓட்டுநர்கள் குஜராத்தில் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, லாரி மூலம் சொந்த ஊருக்கு திரும்பினர். கடந்த மாதம் 29ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் கத்தாரா மாவட்டத்திற்கு வந்தபோது, அம்மாநில காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, அங்குள்ள கல்லூரி மாணவர்கள் விடுதியில் தங்கவைத்தனர்.
இதுகுறித்து லாரி ஓட்டுநர் ராஜமாணிக்கம் கூறுகையில், கடந்த 17 நாட்களாக மகாராஷ்டிராவில் தங்கி வருகின்றோம். எங்களை மருத்துவர்கள் தினசரி பரிசோதனை செய்த நிலையில் யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
அம்மாநில காவல்துறையினர் எங்களை சொந்த ஊருக்கு அனுப்ப மறுக்கின்றனர். அங்கு போதிய உணவு, உடைகள் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம். எனவே இங்கு தங்கியுள்ள 48 ஓட்டுநர்களையும் தமிழ்நாடு அரசு மீட்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:ஊரடங்கு உத்தரவு: விவசாய பணிகள் தொய்வால் விவசாயிகள் கவலை!