ETV Bharat / state

குழந்தைகள் விற்பனை வழக்கு: 7 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

நாமக்கல்: ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் கைதான ஏழு பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : May 24, 2019, 8:04 PM IST

ஏழு பேருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை விவகாரம் வெளியாகி தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற செவிலி அமுதவள்ளி, இடைத்தரகர்கள் பர்வீன், ஹசீனா, லீலா, அருள்சாமி, செல்வி உட்பட 11 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

குழந்தைகள் விற்பனை வழக்கு : 7பேருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

இவர்களின் நீதிமன்ற காவலில் இன்றுடன் (மே 24) முடிவடைந்ததால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், இடைத்தரகர்கள் பர்வீன், ஹசீனா, லீலா, செல்வி, சாந்தி, அருள்சாமி உட்பட ஏழு பேரையும் இன்று நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இவர்களை வரும் ஜூன் 6 ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி வடிவேல் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Intro:இராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் உட்பட ஏழு பேருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

Body:இராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை தொடர்பாக கடந்த மாதம் ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவல்லி என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் கூட்டுறவு வங்கி பணியாளர் ரவிச்சந்திரன் என்பவரையும் இராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்யப்பட்டார்.

பலகோணங்களில் விசாரணை மேற்கொண்ட இராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் குழந்தைகள் விற்பனை செய்ததற்கு உறுதுணையாக இருந்த இடைத்தரகர்கள் பர்வீன்,ஹசீனா, லீலா,அருள்சாமி,செல்வி ஆகியோரை கைது செய்தனர்.மேலும் கைதானவர்கள் தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் குழந்தைகளை விற்பனை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் தமிழக டிஜிபி இவ்வழக்கினை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தார்.

இந்த சிபிசிஐடி போலீசார் கைதானவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சேலத்தை சேர்ந்த சாந்தி என்பவரையும் பெங்களூரை சேர்ந்த ரேகா என்பவரையும் அமுதவல்லியின் சகோதரர் நந்தகுமார் ஆகியோரை கைதுசெய்தனர். இவ்வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்தியசிறையில் உள்ளனர்.

இந்நிலையில் கைதானவர்களை ஏற்கனவே நீதிபதி கருணாநிதி நீதிமன்ற காவலில் மே 24 வரை வைக்க உத்தரவிட்டார். இன்றுடன் நீதிமன்றகால் முடிவடைவதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், இடைத்தரகர்கள் பர்வீன்,ஹசீனா, லீலா,செல்வி,சாந்தி,அருள்சாமி உட்பட ஏழுபேரையும் இன்று நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டன.வழக்கினை விசாரணை மேற்கொண்ட நீதிபதி வடிவேல் ஜீன் 6 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

14 நாட்கள் நீதிமன்ற காவல் முடிவடைந்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் உத்தரவிட்டார்.இதனால் அவர்கள் மீண்டும் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.