ETV Bharat / state

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு; 11 பேரின் காவல்நீட்டிப்பு!

நாமக்கல்: ராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான 11 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராசிபுரம்
author img

By

Published : Jul 4, 2019, 8:09 PM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை வழக்கில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலி அமுதவல்லி, அவரது கணவர் கூட்டுறவு வங்கி பணியாளர் ரவிச்சந்திரன், இடைத்தரகர்கள் பர்வீன், ஹசீனா, லீலா,அருள்சாமி, செல்வி உட்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கினை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் கடத்தல் வழக்கில் கைதானவர்கள் 11 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. அதனால் ஓய்வுபெற்ற செவிலியர் அமுதாவல்லி உட்பட 11 பேரையும் நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். வழக்கினை விசாரித்த நீதிபதி கருணாநிதி குற்றவாளிகள் 11 பேரையும் வருகின்ற ஜூலை 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சேலம் மத்திய சிறைக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

ராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான 11 பேரின் காவல்நீட்டிப்பு

Intro:இராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான 11 பேரின் காவல்நீட்டிப்பு

Body:இராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை தொடர்பாக கடந்த மாதம் ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவல்லி என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் கூட்டுறவு வங்கி பணியாளர் ரவிச்சந்திரன் என்பவரையும் இராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்யப்பட்டார்.

பலகோணங்களில் விசாரணை மேற்கொண்ட இராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் குழந்தைகள் விற்பனை செய்ததற்கு உறுதுணையாக இருந்த இடைத்தரகர்கள் பர்வீன்,ஹசீனா, லீலா,அருள்சாமி,செல்வி ஆகியோரை கைது செய்தனர்.மேலும் கைதானவர்கள் தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் குழந்தைகளை விற்பனை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் தமிழக டிஜிபி இவ்வழக்கினை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தார்.

இந்த சிபிசிஐடி போலீசார் கைதானவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சேலத்தை சேர்ந்த சாந்தி என்பவரையும் பெங்களூரை சேர்ந்த ரேகா என்பவரையும் அமுதவல்லியின் சகோதரர் நந்தகுமார் ஆகியோரை கைதுசெய்தனர். இவ்வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைதானவர்கள் 11 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததால் ஓய்வுபெற்ற செவிலியர் அமுதாவல்லி உட்பட 11 பேரையும் நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டன. இந்த வழக்கினை விசாரணை மேற்கொண்ட நீதிபதி கருணாநிதி குற்றவாளிகள் 11 பேரையும் வருகின்ற ஜூலை 18 ம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிட்டார்.

இதனையடுத்து அவர்கள் சேலம் மத்திய சிறைக்கு பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.