திமுக பொருளாளரும், சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவருமான துரைமுருகன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்ட பணிகளை ஆய்வு செய்தனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய் துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடைபெற்ற, நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பெரியார் மறைந்து பல ஆண்டுகளாக ஆனாலும் அவர் விவாத பொருளாகி இன்றும் நிலைத்து நிற்கிறார். ரஜினிகாந்த்திற்கு பெரியாரை பற்றி தலையும் தெரியாது வாலும் தெரியாது” எனக் கூறினார்.
மேலும், அரசியல் என்பது திறந்த மடம், யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம் என தெரிவித்த அவரிடம் திமுகவில் வாரிசு அரசியல் உள்ளது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதலளித்த துரைமுருகன், முதலில் ஜெயக்குமார் மகன் அரசியலிலிருந்து விலகட்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க...தாமிரபரணி நீர் குடிப்பதற்கு உகந்ததா? தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி