ETV Bharat / state

அடுத்தடுத்து ரெய்டு - பிஎஸ்டி கட்டுமான நிறுவன உரிமையாளர் வீட்டிலும் சோதனை! - லஞ்ச ஒழிப்புத்துறையினர்

சென்னை புளியந்தோப்பில் தொட்டால் உதிரும் வகையில் குடிசை மாற்று வாரியம் கட்டிடத்தை கட்டிய பிஎஸ்டி கட்டுமான நிறுவன உரிமையாளர் தென்னரசு வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் ரெய்டு

author img

By

Published : Oct 22, 2021, 3:34 PM IST

நாமக்கல்: நல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிஎஸ்டி கட்டுமான நிறுவன உரிமையாளர் பி.எஸ்.தென்னரசு. இவர் பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு கட்டடங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகள், குடிசை மாற்று வாரியக் கட்டட பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார்.

இவரது நிறுவனம் தான் சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரியம் கட்டடத்தை கட்டியுள்ளது. அதேபோல் விழுப்புரத்தில் கதவணை, பல்வேறு அரசு மருத்துவக்கல்லூரிகளையும் கட்டியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் இந்நிறுவனத்திற்கு அதிகளவில் கட்டுமான ஒப்பந்தங்கள் கிடைத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று (அக்.22) அவரது வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பரமத்தி வேலூர், நல்லூர் அடுத்த கோலாரத்தில் உள்ள இவரது இல்லத்திலும், நாமக்கல் அடுத்த நல்லிபாளையத்திலுள்ள அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சோதனை செய்து வருகின்றனர்.

பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் ரெய்டு

முன்னதாக இன்று காலை தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் மாநிலத் தலைவர், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை தலைவரான இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அவரது வீடு, அலுவலகத்தில் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: புதிய மாளிகை வீட்டால் ரெய்டில் சிக்கிய இளங்கோவன்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.