ETV Bharat / state

ஆற்று மணல் திருட்டு: லாரியை சிறைப்பிடித்த பொதுமக்கள்!

author img

By

Published : Dec 11, 2020, 9:08 AM IST

நாமக்கல்: கொத்தம்பாளையத்தில் ஆற்று மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியைப் பொதுமக்கள் சிறைப்பிடித்து எலச்சிபாளையம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மணல் திருட்டு
மணல் திருட்டு

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அடுத்துள்ள கொத்தம்பாளையத்தில் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இரவு நேரங்களில் இப்பகுதியில் லாரிகள் மூலம் ஆற்று மணலை திருடிச் செல்வதாக அப்பகுதி பொதுமக்களுக்குத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நேற்று (டிச. 10) அங்கு வந்த லாரியைப் பொதுமக்கள் மடக்கி சோதனையிட்டனர். அதில் எம்.சாண்ட் மணலை மேற்பரப்பில் பரப்பிவிட்டு அடிப்பகுதியில் ஆற்று மணலைத் திருடிச் சென்றது தெரியவந்ததையடுத்து, லாரியைச் சிறைப்பிடித்தனர்.

இத்தகவலின்பேரில் அங்குவந்த எலச்சிபாளையம் காவல் துறையினர் மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியைப் பறிமுதல்செய்து, ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஆற்று மணல் திருட்டு: லாரியை சிறைப்பிடித்த பொதுமக்கள்
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தங்களது பகுதியில் உயர்மட்டப் பாலம் கட்டுவதற்கு, ஒப்பந்தாரர் ஆற்றுப்பகுதியில் உள்ள மணலை அள்ளி கட்டுமான பணிக்கு பயன்படுத்துவதாகவும் வெளியில் மணலை விற்பனை செய்துவருவதாகவும், இது குறித்து வருவாய்த் துறையினருக்குப் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்‌ அதன் காரணமாகவே தற்போது மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை சிறைப்பிடித்ததாகவும் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுபவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.