ETV Bharat / state

மருத்துவக்கழிவுகளைக் கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு..! - medical waste

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே ராயர் பாளையத்தில் செயல்பட்டு வரும் விவேகானந்தா கல்லூரியில் இருந்து வெளியாகும் கழிவுகளால் 4 கி.மீ சுற்றளவுக்கு நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகக் கூறி, கழிவு ஏற்றி வந்த வாகனத்தைச் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

மருத்துவக்கழிவுகளை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு..!
author img

By

Published : Jul 16, 2019, 7:59 AM IST

திருச்செங்கோட்டை அடுத்த ராயர் பாளையத்தில் செயல்பட்டு வரும் விவேகானந்தா கல்லூரிக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இங்கு நீண்ட நாட்களாகக் கல்லூரியிலிருந்து வெளியேறும் கழிவுநீரை, அங்குள்ள தென்னை மரங்களுக்குப் பயன்படுத்தியாகத் தெரிகிறது. சுத்திகரிக்காமல் தண்ணீரை பாய்ச்சுவதால் சுற்று வட்டாரத்தில் உள்ள 4 கி.மீ அளவுக்கு, விவசாய நிலங்களிலுள்ள ஆழ்துளைக் கிணற்று நீர் கெட்டுப்போய் குடிக்கப் பயன்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துவக் கழிவுகளை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு..!

விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும், சோளம் கூட விளைவதில்லை எனவும், ஆடு மாடுகள் கோழிகள் இந்த தண்ணீரை குடிப்பதால் இறப்பதாகக் கூறுகின்றனர் கிராம மக்கள். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அதே இடத்தில் கல்லூரிகளின் குப்பைகளையும், மருத்துவ கழிவுகளையும் கொண்டு வந்து கொட்டுவதாகக் கூறும் பொதுமக்கள், நேற்று அவ்வாறு குப்பைகளை ஏற்றி வந்த ஒரு டிராக்டரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

25 பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதையடுத்து, பொதுமக்கள் சிறை பிடித்த டிராக்டரை விடுவித்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் ராயர்பாளையம் பகுதியில், சுமார் இரண்டு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:நாமக்கல் திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரியின் மருத்துவக்கழிவுகளை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு.Body:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ராயர் பாளையத்தில் தனியார் கல்லூரி தங்களுக்கு சொந்தமான இடத்தில் கல்லூரிகளின் கழிவுநீர் மற்றும் மருத்துவ கழிவுகளை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து டிராக்டரை சிறைபிடித்து போராட்டம். கழிவுநீரால் 4 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ராயர் பாளையத்தில் தனியார் கல்லூரி தங்களுக்கு சொந்தமான இடத்தில் கல்லூரிகளின் கழிவுநீர் மற்றும் மருத்துவ கழிவுகளை கொட்டவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கல்லூரியில் இருந்து குப்பைகளை ஏற்றி வந்த டிராக்டரை சிறைபிடித்து போராட்டம் நடத்தினார்கள். கழிவுநீரால் 4 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
திருச்செங்கோட்டை அடுத்த ராயர் பாளையத்தில் தனியார் கல்லூரிக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு நீண்ட நாட்களாக கல்லூரியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அங்குள்ள தென்னை மரங்களுக்கு பயன்படுத்தியாக தெரிகிறது. சுத்திகரிக்காமல் தண்ணீரை பாய்சுவதால் சுற்று வட்டாரத்தில் உள்ள 4 கிமீ அளவுக்கு உள்ள விவசாய நிலங்களில் ஆழ்துளை கிணற்று நீர் கெட்டுப் போய் குடிக்க பயன்படுத்த முடிய வில்லை. விவசாயத்திற்கும் பயன்படுத்த முடிவதில்லை சோளம் கூட விளைவதில்லை எனவும் ஆடு மாடுகள் கோழிகள் இந்த தண்ணீரை குடிப்தால் இறந்து போகின்றன எனவும் இந்த பகுதி மக்கள் குறை கூறுகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அதே இடத்தில் கல்லூரிகளின் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதாக கூறும் பொதுமக்கள் இன்று அவ்வாறு குப்பைகளை ஏற்றி வந்த ஒரு டிராக்டரை சிறை பிடித்து போரட்டத்தில் ஈடுபட்டனர். 25 பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் இந்த போரட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். போலீசாரின் சமாதானத்தை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் சிறை பிடித்த டிராக்டரை விடுவித்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் ராயர்பாளையம் பகுதியில் சுமார் இரண்டுமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.