ETV Bharat / state

பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குள் வர அனுமதி இல்லை - பொதுமக்களுக்கு தடை

நாமக்கல்: ஆட்சியர் அலுவலகத்திற்குள் அரசு அலுவலர்களை தவிர யாரும் அவசியமின்றி அனுமதிக்கப்பட மாட்டது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் ஆட்சியர் அலுவலகம்
நாமக்கல் ஆட்சியர் அலுவலகம்
author img

By

Published : Jul 1, 2020, 1:29 PM IST

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு யாரும் அவசியம் இல்லாமல் வரக்கூடாது என்பதற்காக அலுவலகத்தின் நுழைவாயில் முன்பு மனுக்களை அளிக்கும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதனை மாவட்ட ஆட்சியர் மெகராஜ், எஸ்.பி.அருளரசு, ஆகியோர் பார்வையிட்டனர். ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசு அலுவலர்களை தவிர தேவையில்லாமல் வருவோரை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். அதே சமயம் அரசு அலுவலர்களையும் அடையாள அட்டை உள்ளிட்ட சோதனைகளை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு தேவையில்லாமல் வருவோரை தடுக்கும் வகையில் நுழைவாயில் முன்பு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்டிகளில் கோரிக்கை மனுக்களை செலுத்தினால் உரிய பதில் அளிக்கப்படும். நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.

வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்தாலே கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கலாம். பொதுமக்கள் தங்கள் தேவைக்கான இ-பாஸ்களை ஆன்லைன் மூலம் பெற வேண்டும்.

இ-பாஸ் வாங்க ஆட்சியர் அலுவலத்திற்கு வர வேண்டாம். ஆட்சியர் அலுவலகம் வரும் அரசு அலுவலர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்து தான் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவேண்டும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : பிலிக்கல்பாளையம் வெல்லம் ஏலச் சந்தை நடத்த தடை விதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.