நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பாவடிதெருவில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக பரமத்தி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், அதிரடி சோதனை மேற்கொண்டதில் வீட்டில் பதுங்கியிருந்த ஒரு பெண், இரண்டு ஆண்களை கைது செய்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணை மேற்கொண்டதில், பரமத்தி வேலூரைச் சேர்ந்த கெளரி (42), கொடுமுடியைச் சேர்ந்த சதாசிவம், தென்னிலையைச் சேர்ந்த சுப்பிரமணி என்பதும், ஒரு மாதமாக கெளரியை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் கண்டறிப்பட்டது. மேலும் சதாசிவம், சுப்பிரமணி இருவரும் அப்பகுதியில் பல பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, குடியிருப்புப் பகுதியில் பாலியல் தொழில் செய்து வந்த மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் அட்டகாசம் - பகீர் சிசிடிவி காட்சி!