ஈரோட்டில் ரெட் டாக்ஸி, பாஸ்ட் டிராக், சரவணா கால் டாக்ஸி உள்ளிட்ட கால் டாக்ஸி நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. இதில் பணிபுரியும் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் 50க்கும் மேற்பட்டோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், "ஈரோட்டில் செயல்படும் தங்களது கால் டாக்ஸி நிறுவனத்தின் மூலம் ஆன்லைன் பதிவு முறையில் ஈரோட்டிலிருந்து திருச்செங்கோடு சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு வாடகைக்கு கார்களை இயக்கி வருகிறோம். திருச்செங்கோடு வாடகை கார் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் தங்களது கார்களை திருச்செங்கோட்டிற்கு உள்ளே விட மறுக்கின்றனர்.
மேலும் தங்களை தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியும் வருகின்றனர். ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதில் குறிப்பிடிப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: 'சமூக விரோதிகளைக் கைதுசெய்ய வேண்டும்' - ஆணையரிடம் புகார்