ETV Bharat / state

பிரசவத்திற்குப் பின் பெண் உயிரிழப்பு - மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள் - பெண் உயிரிழப்பிற்கு மருத்துவர்களே காரணம் என உறவினர்கள் போராட்டம்

நாமக்கல்: பிரசவத்திற்குப் பின் பெண் உயிரிழந்ததற்கு காரணம் மருத்துவர்களின் கவனக்குறைவுதான் எனக் கூறி அப்பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

revathi
revathi
author img

By

Published : Jan 11, 2020, 10:49 PM IST

நாமக்கல் மாவட்டம் தூசூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (32). இவர் பிரசவ வலி காரணமாக கடந்த 9ஆம் தேதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு நேற்று மாலை ஆண் குழந்தை பிறந்தது.

பிரசவத்திற்குப் பின் ரேவதிக்கு கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி ரேவதி நேற்றிரவு உயிரிழந்தார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையே ரேவதி உயிரிழப்பிற்குக் காரணம் எனவும் சம்மந்தப்பட்ட மருத்துவர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி ரேவதியின் உறவினர்கள் நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

உயிரிழந்த ரேவதி

இது குறித்து தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளர் செல்வராஜ் பெண்ணின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து உறவினர்கள் கலைந்துசென்றனர். பின்னர் ரேவதியின் உடலை சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க: தற்கொலையில் புதுச்சேரி இரண்டாமிடம்!

Intro:தூசூர் பகுதியை சேர்ந்த ரேவதி என்ற பெண் நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பின் உயிரிழப்பு, மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என கூறி உறவினர்கள் சடலத்தை வாங்காமல் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்Body:நாமக்கல் அடுத்துள்ள தூசூர் பகுதியை சேர்ந்த ரேவதி(32) என்ற பெண் பிரசவ வலி காரணமாக கடந்த 09-ம் தேதி நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று மாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் குழந்தை பிறந்ததின் காரணமாக ரேவதிக்கு கடுமையான ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய மருத்துவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் ரேவதி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இந்நிலையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையே ரேவதி உயிரிழப்பிற்கு காரணம் எனவும் சம்மந்தப்பட்ட மருத்துவர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி இன்று அவரது உறவினர்கள் நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு வந்த நாமக்கல் காவல் ஆய்வாளர் செல்வராஜ் பெண்ணின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதன்பின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.பின்னர் உயிரிழந்த பெண் ரேவதியின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் நாமக்கல் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.