கடந்த சில வாரங்களாக நூல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருவதை கட்டுபடுத்திட வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்த கூடாது, விசைத்தறி தொழிலாளர்களையும், தொழிலையும் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் நூல் கோண்களுடனும், சாயமேற்றிய நூல்களை கையில் ஏந்தியும் நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய பருத்தி கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் கிடங்கு வசதி ஏற்படுத்தி நூல் இருப்பு வைத்து மலிவான விலையில் வழங்கிட வேண்டும், நூல் பதுக்களை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க:
கொள்ளையர்களால் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து!