நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த ஜேடர்பாளையம் தடுப்பணையில் காணும் பொங்கலை முன்னிட்டு கரூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பங்களுடன் காவிரியாற்றில் ஆனந்த குளியலில் ஈடுபட்டனர். மேலும் காவிரி ஆற்றில் உள்ள மீன்களை சமைத்து குடும்பத்துடன் உண்டனர்.
பின்னர், ஜேடர்பாளையம் தடுப்பணையில் உள்ள அண்ணா பூங்காவில் குழந்தைகளுடன் பெரியவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். தடுப்பணையில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதுகுறித்து சுற்றுலாப் பயணி ஒருவர் கூறுகையில், "காணும் பொங்கலை முன்னிட்டு குடும்பத்துடன் ஜேடர்பாளையம் தடுப்பணைக்கு வந்தோம். இங்கு குடும்பத்துடன் சமைத்து உண்ணுவதற்கு ஏற்ற சூழல் உள்ளது. இருப்பினும் பூங்காவில் பெரும்பாலான இடங்களில் புதர் மண்டி தூய்மை இன்றி காணப்படுகிறது. இதனை அலுவலர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று சரியாக பராமரிக்க கோரிக்கை விடுக்கிறேன்" என்றார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் எனவும் வருங்காலங்களில் தூய்மையாக பராமரிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விபத்தில் பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு